கெளரவ முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஐயாவிற்கு ஒரு திறந்த மடல்!

#SriLanka
Mayoorikka
1 month ago
கெளரவ முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஐயாவிற்கு ஒரு திறந்த மடல்!

புலம்பெயர் தேசம் நோக்கி உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி,அதனூடோ அவர்கள் உங்கள் சேவை நலனை பாராட்டி விழா எடுப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி…

 இலங்கையில் நீதியின் மேல் இன்னும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் உங்களை போன்ற நீதிபதிகள் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்களும் கிடையாது… நெறிதவறாத அறத்தின் ஊடாக,ஒடுக்கும் பேரினவாத அரசின் நிழலில் நின்று,அஞ்சாது நீதியை வழக்கியது தங்களின் ஆன்மபலம் கண்டு ஆச்சரியப்பட்ட நாள் பல உண்டு…

 தீவகத்தின் புதல்வன் என்பதால் இன்னும் உங்களின் மேல் அளப்பெரிய மரியாதையும்,மண் பாசமும் அதிகம் சிலவேளை அது பிரதேசவாதமாகக்கூட இருக்கலாம்… ஆனால் தங்களின் பாராட்டு விழாக்களில் புலம்பெயர் சமூகம் உங்களை உத்தித்தள்ளி அரசியல் பொறியில் விழுத்தி விடுமோ என்னும் பயம் தான் இதனை எழுத தூண்டியது ஐயா…

 எமது இனம் எப்பொழுதும் ஒரு கதாநாயகனை தேடும் நிலைக்கு 2009க்கு பின் தள்ளப்பட்டு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்,அதன் வடிவிலே அதீத எதிர்பார்ப்பில் கொண்டுவரப்பட்ட ஐயா விக்கினேஸ்வரன் அரசியல் நிலையும், அதன் பின் சிவனேயெனயிருந்த கே.பி தவராசா ஐயாவை சைக்கிளில் வா மாம்பழம் விற்கலாம் என கூட்டிப்போய் தெருவில் விட்ட அரசியலும் தாங்கள் சமகாலத்தில் பார்த்தவைகள்…

 திடீர் வைத்தியர் ஈழ மீட்பர் நம்பி பாட்டு படிச்சு எதிர்காலமே என கூவிய இதே புலம்பெயர் சமூகம் இன்று பைத்தியம் என மார்பில் அடித்து அழுவதையும் கவனிப்பீர்கள்… இதன் அடுத்த வடிவம் அல்லது மீட்பரை தேடும் அடுத்த தொடர்ச்சிதான் உங்களையும் அரசியலுக்கு வா அடுத்த தேசியத்தலைவர் ஆக்குறம் என தமிழ் தேசிய குத்தைகை கூட்டம் அழைப்பதை நேரலையில் பார்த்தேன்….

 நீங்கள் இவ்வளவு காலமும் கட்டிக்காத்த மாண்பும்,மக்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் பேரன்பும்,இதய அறையில் ஒரு ஆசனம் இட்டு நீதியென்றால் ஐயா நீதிபதி இளஞ்செழியன் தான் என்னும் பெருமையுடனும் நீங்கள் இறுதிக்காலம் வரை வாழவேணும்…

 இதனையெல்லாம் விட்டு இந்த பாவப்பட்ட மக்களுக்கு புனித நீர் தெளித்து பாவ மன்னிப்பு வழக்கி நானும் யேசுநாதர் ஆகாலம் என நினைச்சு போய் பின்னர் அதே மக்களால் சிலுவையில் அறையப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,ஏனெனில் எங்கள் இனம் எப்பவும் ஒரு கதாநாயகனை தேடும் இனம்…. தமக்கு ஏற்றால் போல ஆளை மாற்றும் இனமும் கூட அதில் இந்த புலம்பெயர் சமூகம் தாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் உடனமே ரிமோட் கொன்ரேல் எடுத்து சனலை மாற்றுவது போல மாத்திட்டு துரோகி பட்டமும் இலவசமாக தந்து விட்டு நகர்த்து விடும்…

 இதில் தீவக இளைஞர் அரசியல் அணிகள் சில தங்களின் எதிர்கால சுயநல அரசியலுக்கு உங்களை பகடையாக உருட்ட முனைவதை பல தடவை அவதானித்து இருக்குறேன். சிக்கி விடாதீர்கள் ஐயா… அன்பின் கனம் முன்னாள் நீதிபதி அவர்களே மக்களுக்கு சேவை செய்யனும் என நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு அமைப்பை உருவாக்கி அதனூடாக சட்டம் சார் முன்னொடுப்புக்களை செய்யலாம்,உதவலாம் ஒரு இயக்கமாக செயல்ப்படலாம்… 

அதனை விட்டு “தலைவா வா தலமை ஏற்க வா" என்னும் வெற்று கோஷங்களுக்கு மயங்கி தெளிந்த நீரோடையாக இருக்கும் நீங்கள் குழம்பி போய் சேறும் சகதியுமாக மாறுவதை உங்களை பேரன்பு கொண்டு நேசிக்கும் எம்மை போன்றவர்கள் விரும்பவில்லை… 

உங்களின் அறிவும்,ஆற்றலும்,ஆளுமையும்,சிறந்த சிந்தனையும்,நேர்மை தவறாத நேர்கொண்ட பார்வையும்,ஒன்றாக்கி அலசி ஆராய்த்து இந்த அவசரகாரர்களின் உரலில் போய் விழுத்து இடிபட மாட்டீர்கள் என நம்புகிறேன். 

நன்றி இங்கனம், உங்களின் நலன் விரும்பி. 

 பி.கு - போலி சர்ச்சைகளை எல்லாம் கிண்டி கிளறி, கிடைச்சவன் தெரிஞ்சவன் எல்லார் மீதும் அவதூறு பேசி மக்களைப் பேய்க்காட்டி கோடி கணக்கில காசையும் சுருட்டி, MP ஆகி எங்கள் தமிழ் மக்கள்ட மானத்தை பறக்க விட்டிருக்கிற ஒருத்தனும் கூட உங்களைப் பற்றி பல்லில நாக்குப்பட பேசுற அளவுக்கு நிலைமை இருக்கய்யா. இது ஏன் உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதருக்கு ? 

-ஈழச் சூரியன் - முகநூல் பக்கம்- 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!