ஐந்து நாட்களில் 'அவதார் 3' படம் உலகளவில் செய்த வசூல் எவ்வளவு?
#Cinema
#Collection
#money
#Movie
#Hollywood
Prasu
1 hour ago
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.
இதனை தொடர்ந்து அவதார் படத்தின் மூன்றாம் பாகமான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் கடந்த 19ம் தேதி வெளியானது.
இதில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை பெரிதாக திருப்தி படுத்தவில்லை என்றாலும் 5 நாட்களில் ரூ. 4000 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
(வீடியோ இங்கே )