இந்திய மீனவர்கள் மூவருக்கு கடூழிய சிறை தண்டனை விதிப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
இந்திய மீனவர்கள் மூவருக்கு கடூழிய சிறை தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களுள் 03 பேருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலதிகமாக  3 மாதகாலம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். 

 கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!