8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

#SriLanka #Warning #landslide #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது என தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

சோமாவதிய வீதி தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதான வீதிகளிலும் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஒரு ஒருங்கிணைந்த அவசர காலத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், எவ்வித இடையூறுமின்றி பரீட்சைகளை நடத்தவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 

எந்தவொரு அவசர நிலைமையையும் கையாளுவதற்கு முப்படைகள், பொலிஸார் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மேலதிக தகவல்களுக்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4