யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை சம்பவ இடத்திலேயே பலி!

#SriLanka #Jaffna #Accident #family #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை சம்பவ இடத்திலேயே பலி!

நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் கூடப்பிறந்த சகோதரனும் சகோதரியும் சம்பவ இடத்தில் பலியான சோக சம்பவம் பதிவாகியுள்ளது

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் யாழ் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) என்ற இளைஞனும் அவரது சொந்த சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சகோதரி திருமணம் செய்து இரண்டு மாதங்களிலே இத் துயர சம்பவம் நடந்துள்ளது

இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இவ்விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4