தொடரும் சீரற்ற வானிலை - நிலச்சரிவு எச்சரிக்கைகள் புதுப்பிப்பு!
தற்போது நிலவும் பாதகமான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, நிலச்சரிவு எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துள்ளது.
இதற்கமைய இன்று (24) காலை 5.00 மணி முதல் நாளை காலை 5.00 மணி வரை இந்த எச்சரிக்கைகள் அமலில் இருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிலை 2 எச்சரிக்கைகளை வெளியிட்டு, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தில் - தெஹியோவிட்ட, தெரனியகல, ருவன்வெல்ல, யதியந்தோட்டா
இரத்தினபுர மாவட்டத்தில் - குருவிட்ட, இரத்தினபுர, அயகம மற்றும் எஹெலியகொட
மேலும், நிலை 1 எச்சரிக்கைகளை வெளியிட்டு, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் - சீத்தாவக்க, பதுக்க. கம்பஹா மாவட்டத்தில் - அத்தனகல்ல.
களுத்துறை மாவட்டத்தில் - பாலிந்தநுவர, மத்துகம, இங்கிரிய, புலத்சிங்கள, அகலவத்தை, ஹொரண.
கேகாலை மாவட்டத்தில் - புலத்கொஹுபிட்டிய
நுவரெலியா மாவட்டத்தில் - அம்பகமுவ.
இரத்தினபுரி மாவட்டத்தில் - கிரியெல்ல, பெல்மதுல்ல, நிவிதிகல, எலபாத, மற்றும் கலவான.
(வீடியோ இங்கே )