தனிமையில் வாடும் முதியோர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய கனடாவில் வசிக்கும் திரு. இந்திரலிங்கம்

#SriLanka #Elder #Lanka4 #Birthday #L4
Prasu
2 hours ago
தனிமையில் வாடும் முதியோர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய கனடாவில் வசிக்கும் திரு. இந்திரலிங்கம்

இத்தாலி மனிதநேய சங்கத்தின் அன்பான வணக்கங்கள்! கனடாவில் வசிக்கும் திரு. இந்திரலிங்கம் (சிபி) அவர்கள், இன்று தனது 48வது அகவையில் தடம் பதிக்கின்றார். 

தன் பிறந்தநாளைத் ஆடம்பரமாகக் கொண்டாடாமல், முதியோர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்து, ஈகைத் குணத்தோடு கொண்டாடும் உன்னத மனிதருக்கு எங்களது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

images/content-image/1781079172.jpg

முதியோர்களுக்கான சுற்றுலா & விசேட உணவு - 2026 

தனிமையில் வாடும் முதியோர்களைத் தேடிச் சென்று, அவர்களைச் சுற்றுலா அழைத்துச் சென்று, விசேட உணவுகளும் வழங்கி, இந்த நாளை வாழ்நாளில் மறக்க முடியாத அர்த்தமுள்ள நாளாக மாற்றியுள்ளார் திரு. இந்திரலிங்கம் அவர்கள். 

இந்த உன்னதமான நற்பணிக்கு முழு முதற்காரணமாக இருந்து, நிதியுதவி வழங்கித் தூணாக நின்ற அவரது அன்பு அம்மா மற்றும் தங்கை இருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் சமர்ப்பிக்கின்றோம். 

உங்கள் வாழ்க்கை என்றும் குறையாத ஆரோக்கியம், வற்றாத சந்தோஷம், மற்றும் தொடர் வெற்றிகளால் நிறையட்டும்! நீங்கள் விதைக்கும் இந்த அன்புச் செயல்கள், தொடர்ந்து பலரின் வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும்! 

images/content-image/1781079191.jpg

களப்பணியாளருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்: 

இந்த முதியோர் சுற்றுலாத் திட்டத்தினை, புதுக்குடியிருப்பு மண்ணில் மிகச் சிறப்பான முறையில் திட்டமிட்டு அர்ப்பணிப்போடு செயல்படுத்திய திரு. கு. அகிலன் (Jkt பண்ணை சமூக நலன் திட்ட செயற்பாட்டாளர் & புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்) அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுடன்

JKT ஒருங்கிணைந்த பண்ணை

இத்தாலி மனிதநேய சங்கம்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4