நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு: நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் முக்கிய விளக்கம்!

#SriLanka #Parliament #Age #Minister #Lanka4 #Judge #Justice #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு: நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் முக்கிய விளக்கம்!

உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பிலும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக, அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக அமைச்சரவையின் (Cabinet) ஒப்புதலைப் பெறவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிரதம நீதியரசரின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அண்மைக் காலமாக வெளியான செய்திகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) கவலைகளுக்கு மத்தியில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 ஆகவும் உள்ள நிலையில், இதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்வதாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4