சொல்லிசை கலைஞர் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதி!

#SriLanka #Singer #Bail #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதி!

கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தனக்கு பிணை வழங்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைகளுக்கு எதிராக, சங்கீத்சன் சார்பில் மறுசீராய்வு மனு (Revision Petition) ஒன்றை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை (FR) மனு, நாளை அல்லது எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த முக்கிய நகர்வாக எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் வழங்கவுள்ள கட்டளை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4