60,000 ஜே.வி.பி-யினரைக் கொன்றதும் இந்த PTA-வே; உடனே நீக்க வேண்டும் – சிறிதரன்!

#SriLanka #Lanka4 #sritharan #Killed #jvp #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
8 hours ago
60,000 ஜே.வி.பி-யினரைக் கொன்றதும் இந்த PTA-வே; உடனே நீக்க வேண்டும் – சிறிதரன்!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றைத்தொடர்ந்து. ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாடகர் தொடர்பாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசாரணை தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே மாற்று சட்டம் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் அண்மையில் கிளிநொச்சியைச்சேர்ந்த பாடகர் சங்கீத்சன் பயங்கரவாத சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குறித்த சட்டம் மாற்றப்பட்டு சாதாரண சட்டம் மூலம் பிணையில் விடுதலையாகியுள்ளார்.இதற்கு நாட்டின் தலைமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். சங்கீத்சனை சிறையில் சென்று பார்வையிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜிதஹேரத்தை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக பேசியிருந்தேன். 

கடந்த புதன்கிழமை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியிருந்தேன் அதன்போது சாதாரண பிணையில் அவரை எடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோரிடமும் பேசியிருந்தேன் .

மக்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. அனைவரின் முயற்சியுமே விடுதலைக்கு காரணம் குறிப்பாக சட்டத்தரணிகள்.60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும்.

பல இலட்சம் எமது மக்களை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே மாற்று சட்டம் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசு முன்னெடுத்துள்ள விசாரணை தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். 

ஒரு இனத்தை அல்லது மதத்தை எப்படி கொல்லலாம் என திட்டமிட்ட செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. முஸ்லீம் மக்களை வைத்து தமிழ் மக்கள் தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர்.

சுரேஸ் சாலே போன்ற குற்றவாளிகளை கைது செய்து எவற்றிற்கும் அச்சப்படாது நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். சொல்லிசை பாடகர் சங்கீர்த்தனன் கடந்த மாதம் பயங்கரவாத தடை சட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சாதாரண சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார் 

நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞனை விடுதலை செய்த நாட்டின் தலைவர் மாண்புமிகு ஜனாதிபதி ஆனந்த குமார திசாநாயக்க அவர்களுக்கும் மற்றும் புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது உறவுகள் மற்றும் எம்நாட்டு உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் குறிப்பிட்டார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4