இலங்கையில் கடவுச்சீட்டு பெற விரும்புவர்கள் அறிய வேண்டிய விஷயங்கள்
வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்காக இலங்கை குடியுரிமை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முக்கிய ஆவணம் இலங்கை கடவுச்சீட்டு ஆகும்.
இலங்கை கடவுச்சீட்டினை வழங்கும் பொறுப்பு இலங்கை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்கு மட்டுமே உள்ளது.
இலங்கை கடவுச்சீட்டுகளின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்:
1. இராஜதந்திர கடவுச்சீட்டு (Diplomatic Passport)
- இலங்கை இராஜ தந்திரிகள், உயர் அரச அலுவலக பதவியில் உள்ளவர்கள் மற்றும் இராஜ தந்திர முகவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு (Official Passport)
- இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.
3. சாதாரண கடவுச்சீட்டு (Ordinary Passport)
- வழமையான பயணங்களுக்காக வழங்கப்படுகிறது. எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியானது.
- காலாவதி காலம்: 10 ஆண்டுகள் (16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 3 ஆண்டுகள்).
4. தற்காலிக பயண ஆவணங்கள்/அவசர சான்றிதழ் (Temporary Travel Documents)
- இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் செல்ல செல்லுபடுயாகும். அதாவது, ஆன்மிகச் பயணம், மருத்துவ பரிகாரம் போன்றவற்றுக்காக.
- சவுதி அரேபியாவுக்குச் செல்ல செல்லுபடுயாகும். அதாவது, ஹஜ், உம்ராஹ் ஆன்மிகச் பயணத்திற்காக.
5. இயந்திரத்தில் வாசிக்க முடியாத கடவுச்சீட்டு (NMRP)
வெளிநாடுகளில் கடவுச்சீட்டைத் தொலைத்தவர்களுக்கோ அல்லது காலாவதியானவர்களுக்கோ அவசரமாக ஒருமுறை இலங்கைக்குத் திரும்புவதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களால் வழங்கப்படுகிறது.
இலங்கையில் கடவுச்சீட்டு பெற தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்பப் படிவம் (ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்).
- தேசிய அடையாள அட்டை.
- பிறப்புச் சான்றிதழ் (மொழிபெயர்ப்புச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).
- 3 வர்ண புகைப்படங்கள் (வெள்ளைப் பின்னணி, 3.5 செ.மீ × 4.5 செ.மீ).
தொழில் சான்றிதழ்:
- கடவுச்சீட்டில் உங்கள் தொழிலைப் பதிவு செய்ய விரும்பினால், அதற்கான கல்வி, தொழில்முறை அல்லது சேவைச் சான்றிதழ்களின் மூலங்களும் பிரதிகளும்.
திருமணமான பெண்களுக்கு:
- கணவரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், திருமணச் சான்றிதழின் மூலப்பிரதியும் பிரதியும் தேவை. (வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்).
16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு (Minor):
- பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் கடவுச்சீட்டுகள்.
- பிள்ளைக்கு கடவுச்சீட்டு பெற பெற்றோர் இருவரும் சம்மதிக்கும் கடிதம் மற்றும் அவர்களின் கடவுச்சீட்டு தரவுப் பக்கங்களின் பிரதிகள்.
- சட்டப்பூர்வ பாதுகாவலர் எனில் அதற்கான நீதிமன்ற ஆவணங்கள்.
குறிப்பு:
- இலங்கையில் புதிய கடவுச்சீட்டு பெற சாதாரண சேவைக்கு ரூ.10,000, அவசர சேவைக்கு ரூ.15,000 அறவிடப்படுகிறது.
அழைப்பு தொடர்பான தகவல்கள்:
- முகவரி: குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், சுகுறுபாயா, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.
- உடனழைப்பு: 1962
- தொலைபேசி: +94 112 101 500
- தொலைநகல் (பெக்ஸ்): +94 11 2885358
- மின்னஞ்சல்: controller@immigration.gov.lk
- இணையத்தளம்: www.immigration.gov.lk
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே