ஸ்லோவாக்கியாவில் மிக உயரிய சிவிலியன் விருதை பெற்ற நரேந்திர மோடி

#India #PrimeMinister #Lanka4 #Award #NarendraModi #Slovakia #L4
Prasu
2 hours ago
ஸ்லோவாக்கியாவில் மிக உயரிய சிவிலியன் விருதை பெற்ற நரேந்திர மோடி

ஸ்லோவாக்கியா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான தி ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்லோவாக்கியா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார்.

வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

1993ம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திர நாடாக உருவெடுத்த பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4