மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்: 126 பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க அங்கீகாரம்!

#SriLanka #Student #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Abi
1 hour ago
மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்: 126 பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க  அங்கீகாரம்!

இலங்கையில் உள்ள பாடசாலை விடுதிகளில் பழுதடைந்த நிலையில் காணப்படும் 126 விடுதிக் கட்டிடங்களை அவசரமாக நவீனமயமாக்குவதற்கான விசேட கருத்திட்டத்திற்கு (Special Project) அமைச்சரவை உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட யோசனைக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நவீனமயமாக்கலுக்கான முக்கிய பின்னணி மற்றும் குறைபாடுகள்: தற்போது எமது நாட்டுப் பாடசாலை விடுதிகளில் நிலவும் பின்வரும் பாரிய குறைபாடுகள் காரணமாக, அங்கு தங்கியுள்ள மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் கல்விச் செயலாற்றுகைகளுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டு, இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது:

126 விடுதிக் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த ஆபத்தான நிலைமையில் காணப்படல். விடுதிகளின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படல். அடிப்படை வசதிப் பற்றாக்குறை: பௌதீக மற்றும் சுகாதாரநல வசதிகள் (Sanitation) போதியளவில் இல்லாமை.

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்மை. இதன் காரணமாக, இந்த விடுதிகளுக்குத் தேவையான வசதிகளை அவசரமாக நவீனமயப்படுத்தி, மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பொருத்தமான ஒரு தரப்பண்பான சூழலை உருவாக்க வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டமானது 2026 – 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் முழுமையாக அமுல்படுத்தி முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக பாடசாலை விடுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கான பாதுகாப்பான, சுமுகமான மற்றும் சுகாதாரமிக்க தங்குமிட சூழல் உறுதிசெய்யப்படும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4