நாட்டின் கடன் சுமை 35 ட்ரில்லியனாக உயர்வு: தற்போதைய அரசுக்கு தயாசிறி ஜயசேகர கண்டனம்!
கடந்த 16 மாத காலப்பகுதிக்குள் நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை மேலும் 7 ட்ரில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த அதிரடி விமர்சனத்தை முன்வைத்தார்.
"இலங்கையின் கடந்த 76 வருட கால வரலாற்றில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமையே 28 ட்ரில்லியன் ரூபாவாகத்தான் காணப்பட்டது. ஆனால், தற்போதைய குறுகிய காலப்பகுதிக்குள் அது 35 ட்ரில்லியன் ரூபா வரை, மேலும் 7 ட்ரில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
" இது குறித்து தான் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். "கடன் வாங்கி அரசாங்கம் நடத்தத் தேவையில்லை என்று மேடைகளில் கூறியவர்கள், இன்று எங்களை விடவும் அதிகமாகக் கடன் பெற்று வருகின்றனர்.
அரசாங்கத் தரப்பினர் அன்று 1 ட்ரில்லியன் என்று பெருமையாகக் குறிப்பிட்டு வந்த தொகையானது தற்போது 500 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது" என சாடினார்.
"மக்கள் உணரும் காலம் தூரமில்லை" தற்போதைய பொருளாதாரக் கொள்கையின் உண்மைத் தன்மையை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என எச்சரித்த அவர்: "நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமை என்ன என்பதை மக்கள் எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள்.
என்ன நடக்கப் போகிறது என்பதை நாட்டின் மக்களே உணர்ந்து கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே