ஈஸ்டர் தாக்குதல் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் திடீர் திருப்பம்

#SriLanka #Gotabaya Rajapaksa #Easter Sunday Attack #Lanka4 #BombBlast #Investigations #L4
Prasu
1 hour ago
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் திடீர் திருப்பம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்புச் சம்பவங்களின் விசாரணையில் தற்போது மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்யக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சாரா ஜாஸ்மின் விவகாரத்தில், உடல்களைத் தோண்டி எடுத்து மூன்றாவது டி.என்.ஏ (DNA) பரிசோதனை நடத்துமாறு தமக்குக் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக, ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சிஐடியிடம் எழுத்துமூல ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

பாதுகாப்பு சபைக் கூட்டங்களின் போது கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரதானி சுரேஷ் சலே ஆகியோர் இந்த அழுத்தங்களை வழங்கியதாக அவரது குறிப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணைகளில் முக்கிய நபராக மாறியுள்ள கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவருக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4