வடமராட்சி வடக்கில் சமுர்த்தி திட்டத்தின் கீழ் இரு புதிய வீடுகள் கையளிப்பு

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வடமராட்சி வடக்கில் சமுர்த்தி திட்டத்தின் கீழ் இரு புதிய வீடுகள் கையளிப்பு

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீட்டு வசதியற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் தரமானதுமான வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திரலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவனால் பயனாளியான ஸ்ரீகரன் சதீஸ்வரனுக்கு புதிய வீடு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் சந்திரமூர்த்தி, புதிய வீடு கையளிக்கப்பட்டதன் மூலம் குறித்த குடும்பத்தின் நீண்டகால வீட்டு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் இது முக்கிய ஆதரவாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/412 கிராம அலுவலர் பிரிவிலும் சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மற்றுமொரு புதிய வீடு நேற்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விலும் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவனால் பயனாளியான மகேந்திரராஜா மகேஸ்வரிக்கு வீடு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சிதம்பரநாதன் அருள்ரூபன், தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன் மற்றும் பிரதீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4