சுவிஸ் நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல் - மக்களே அவதானம்

#SWITZERLAND #Disease #LANKA4 #Warning #Virus #L4
Prasu
2 hours ago
சுவிஸ் நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல் - மக்களே அவதானம்

வணக்கம் லங்கா4 ஊடக நேயர்களே, மீண்டும் ஒரு சிறப்பு சுவிஸ் செய்தியோடு அவசரமாக ஒன்று கூடியிருக்கின்றோம்.

சுவிற்சர்லாந்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளது. குறித்த வைரஸ் காய்ச்சல் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்குத் தெரிந்த கண்டோன் லூசெர்ன் (Luzern) எம்மென்புரூக் (Emmenbrücke ) என்ற இடத்தில் இருக்கின்ற தமிழ் நபர் ஒருவருக்கு குறித்த வைரஸ் தொற்றியுள்ளது.

இந்த நோய் தொற்று ஏற்பட்டவர் அடிக்கடி வைத்தியசாலைக்குச் செல்கின்றவர், அவருக்குத் தேவையான ஒருவர் வைத்தியசாலையில் இருக்கின்ற காரணத்தினால் அவர் தினமும் வைத்தியசாலைக்குச் சென்று வருகின்ற ஒருவராக இருந்துள்ளார்.

99% அவருக்கு இந்த தொற்று வைத்தியசாலையில் தொற்றியிருக்கலாம் என அய்யப்பாடு லங்கா4 ஊடகத்திற்கு உள்ளது.

இது ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தி ஆகும். ஆனால், இந்த தொற்று செய்தி உண்மையிலேயே ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தி மற்றும் அவர் மூலமாகவே எடுக்கப்பட்ட செய்தி ஆகும்.

நீங்கள் நோயாளிகளோடு அல்லது வைத்தியச்சாலைக்குச் செல்கின்ற பொழுது நீங்கள் அவதானமாக இருக்க வேண்டியது உங்களுடைய கடமை.

அதாவது கொரோனா தாக்குதல் நடைபெற்ற பொழுது மாத்திரம் தான் அனைவரும் துப்புரவாக்கி (Sanitizer) என்கிற சுத்திகரிப்பானை பயன்படுத்தினோம்.

ஆனால், அனைவரும் வைத்தியசாலைக்கு போகும்போதும், அதிகமான மக்கள் கூடும் போது அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பானை பயன்படுத்தவேண்டும்.

ஆகவே, அனைவரும் வைத்தியசாலைக்கு போகும்போதும், அதிகமான மக்கள் கூடும் போது வாகனத்தில் செல்லும் போது முக்கியமாக பண தாள்கள் மற்றும் சில்லறைகளை பெரும் போது சுத்திகரிப்பானை பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், பொது கழிவறைகளை பாவிக்கும் பொது குறிப்பிட்ட துப்புரவாக்கியை (Sanitizer) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!