கனடாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

#Death #CANADA #Accident #LANKA4 #Youngster #L4
Prasu
1 hour ago
கனடாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள மான்க்டன் பகுதி அருகே இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் ஒன்றும் எஸ்.யு.வீ ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கார் கட்டுப்பாட்டை இழந்து நடுக் கோட்டைக் கடந்து சென்று எதிரே வந்த எஸ்.யு.வி வாகனத்துடன் மோதியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு வாகனங்களிலும் தலா 5 பேர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 16 வயது சிறுமி மற்றும் 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 வயது சிறுவன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!