சூர்யா நடிப்பில் கிடார் கம்பி மேலே நின்று: தூரிகா பாடல் வெளியீடு

Nila
3 years ago
சூர்யா நடிப்பில் கிடார் கம்பி மேலே நின்று: தூரிகா பாடல் வெளியீடு

ஓடிடிடியில் விரைவில் வெளியாகும் நவரசா படத்தில் சூர்யா இடம்பெற்றுள்ள பாடலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை பிரியதர்ஷன், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன், பிஜாய் நம்பியார். வசந்த் சாய், சர்ஜுன் கே.எம்., அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். 

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், யோகி பாபு, அரவிந்த் சாமி, பிரசன்னா, ரேவதி, பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  

ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

நவரசா படத்தைத் தயாரித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து ரூ. 10 கோடிக்கும் அதிகமான தொகையை பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணி ரத்னம் வழங்குகிறார். பெப்சி திரைப்பட உறுப்பினர்கள் 12,000 பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ. 1500 வீதம் 6 மாதங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவரசாவில் கிடார் கம்பி மேலே நின்று என்கிற படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். சூர்யா, பிரயகா மார்டின் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள தூரிகா என்கிற பாடல் வெளியாகியுள்ளது. பாடகர் இசையமைத்துப் பாடியுள்ளார். பாடல் வரிகள் - மதன் கார்க்கி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!