அஜித், விஜய், தனுஷ், மாதவன், நயன்தாரா, சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
Nila
3 years ago
கோலிவுட் TOP 5 பிரபலங்களின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
பிரபலங்களின் சம்பள விவரங்கள் மற்றும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு அலாதியான இன்பம் இருக்கும்.
தல அஜித், தளபதி விஜய், தனுஷ், மாதவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளிட்ட தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் 5 நடிகர்களின் சொத்து விபரங்கள் குறித்து இங்கே காண்போம்.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக கலக்கி வரும் நடிகர்கள் மொத்தமாக சேர்த்து வைத்துள்ள சொத்து விபரங்கள் குறித்து வைரலாகி வரும் தகவல்கள் தான் இவை.
விஜய்
- 410 கோடி கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக திகழும் தளபதி விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 410 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 6 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதல் ஏகப்பட்ட சொகுசு கார்களையும், சாலி கிராமம், பனையூர் மற்றும் நீலாங்கரை என பல இடங்களில் பங்களாக்களும் நடிகர் விஜய்க்கு சொந்தமாக இருக்கின்றன.
- பீஸ்ட் படத்திற்கு 100 கோடி வரை விஜய்க்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்
- 180 கோடி தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகர் தல அஜித் 40 முதல் 50 கோடி வரை புதிய படங்களில் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- சொகுசு கார்கள், பைக்குகள் மற்றும் சைக்கிள்களை வைத்துள்ள நடிகர் அஜித் சென்னை மற்றும் திருவான்மியூரில் பங்களாக்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
- நடிகர் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு 180 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷ்
- 145 கோடி கோலிவுட் முதல் ஹாலிவுட் முதல் கலக்கி வரும் நடிகர் தனுஷ் 10 முதல் 12 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வருகிறார்.
- நடிகர் விஜய் வைத்துள்ளதை போலவே 6 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரையும் வைத்துள்ளார்.
- போயஸ் கார்டனில் புதிதாக நடிகர் தனுஷ் கட்டி வரும் வீடு மட்டுமே 150 கோடிகள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- அப்படி பார்த்தால் தனுஷின் சொத்து மதிப்பு மேலும் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவன்
- 103 கோடி சென்னையில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் நடிகர் மாதவன் வசித்து வருகிறார்.
- மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து வரும் மாதவன் ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் வரை சம்பாதித்து வருகிறாராம்.
- BMW 7 சீரிஸ் கார்கள், டுகாட்டி பைக்குகள் என ஏகப்பட்ட விலையுயர்ந்த வாகனங்களை கொண்டுள்ள நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு 103 கோடி ரூபாய் என்கின்றனர்.
நயன்தாரா
- 71 கோடி தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 71 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- கேரளா மற்றும் சென்னையில் இவருக்கு தனி வீடுகள் உள்ளன.
- 5 கோடி முதல் 7 கோடி வரை புதிய படங்களுக்கு சம்பளமாக வாங்கி வருகிறார் நயன்தாரா.
- ஷாருக்கானின் பாலிவுட் படம் க்ளிக் ஆனால், 10 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.