விஜய் தொலைக்காட்சி தொடரில் எதற்கு அதிக வரவேற்பு தெரியுமா...
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கியுள்ள தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக துவங்கியுள்ள இந்த சீரியலின் ப்ரமோக்களும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரமோ சிறப்பான வகையில் அமைந்துள்ளது.
தமிழும் சரஸ்வதியும் கடந்த திங்கட்கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய தொலைக்காட்சித் தொடர் இரவு 7.30 மணியளவில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
முதல் நாளிலேயே அருகம்புல் ஜூஸ், கம்பு தோசை, வரகரசி பொங்கல் என உணவுப் பிரியர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது தொடர்.
தொடரில் படிக்காத பணக்காரர் ரோலில் தீபக் நடித்து வருகிறார். நாயகியாக தொகுப்பாளினி மற்றும் நடிகையான நட்சத்திரா நாகேஷ் நடித்து வருகிறார்.
நேற்றைய புதிய ப்ரமோவில் தீபக்கின் மாமன் மகள் அவரை 10வது மட்டுமே படித்துள்ளதாக கூறி திருமணத்திற்கு நிராகரிக்கும் காட்சி காணப்படுகிறது.
இதையடுத்து தீபக் உடைந்து போகிறார். அவரது தாய், அந்த பெண்ணை பார்த்து அவரை விட அதிகமாக படித்த பெண்ணை தீபக்கிற்கு மணமுடிப்பேன் என்று சவால் விடுவதாக அந்த ப்ரமோ போகிறது. இந்நிலையில் 12வது வகுப்பில் தேறுவதற்கே போராடும் நட்சத்திரா எவ்வாறு அவருக்கு ஜோடியாக மாறுவார் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
மாமன் மகளிடம் சவால் விடும் தீபக்கின் அம்மா எவ்வாறு நட்சத்திராவை தீபக்கிற்கு துணையாக ஏற்பார் இவர்களை காலம் எப்படி சேர்த்து வைக்கும் என்பதாக இந்த சீரியல் செல்லவுள்ளது.
சிறப்பான சீரியல்களை கொடுத்துள்ள குமரன் இந்த சீரியலை இயக்கியுள்ள நிலையில் மக்களின் இந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.