பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தினசரி சம்பளம் பற்றி தகவல் உண்மை தானா?
இந்த சீரியலை நிஜ வாழ்க்கையில் நடக்கும் கதையாகவே நினைத்து பார்த்து வருகின்றனர்.
நடிகர், நடிகைகளில் நிஜ பெயர்களை மறந்து கேரக்டர் பெயர்களை சொல்லியே கூப்பிட்டு வருகின்றனர்.
தினமும் இந்த சீரியல் பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியாகி, பரபரப்பை கிளப்புவது வாடிக்கையாகி விட்டது.
சமீபத்தில் இந்த சீரியலில் டாக்டர் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதால் இனி அவர் நடிக்க மாட்டாரா, அவருக்கு பதில் யார் நடிப்பார்கள் என்பது போன்றவை பரபரப்பாக பேசப்பட்டது.
லேட்டஸ்ட்டாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தினசரி சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
இது உண்மை தானா என தெரியவில்லை. ஆனாலும் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதன்படி கண்ணம்மாவாக நடிக்கும்.
ரோஷினி ஹரி பிரியனுக்கு தினசரி சம்பளமாக ரூ.20,000 கொடுக்கப்படுகிறதாம்.
பாரதியாக நடிக்கம் அருண் பிரசாத்திற்கும் ரூ.20,000 கொடுக்கப்படுகிறதாம்.
ரூபஸ்ரீ (செளந்தர்யா) - ரூ.15,000, ரிஷி கேசவ் (வேணு) - ரூ.12,000,
ஃபரீனா (வெண்பா) - ரூ.10,000,
அகிலன் - ரூ.10,000,
கண்மணி (அஞ்சலி) ரூ.9000,
செந்தில்குமாரி (பாக்யலட்சுமி) - ரூ.5000 தினசரி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.