நடிகர் மணிவண்ணனின் சிறந்த கண்டுபிடிப்பு!
"சினிமா சூட்டிங் எடுக்கிற கேமராவுல இருக்கிற லென்சு ஜெர்மன்காரன் கண்டுப்புடிச்சான். அவன்கிட்டதான் நம்ப ஊரு சினிமாக்காரனும் லென்சு வாங்கறான். மற்ற நாட்டுக்காரன்களாம் ஜெர்மன் நாட்டுல கேமரா லென்சு வாங்கனா பத்து, பதினைஞ்சு வருஷம் பாவித்தது நம்ப ஊருகாரன் வாங்கனா ஒண்ணு, ரெண்டு வருஷம் தான் பாவித்தது இவன்களும் 'இன்னாடா கேமரா இவ்ளோ சீக்கிரமா வீணாகிப் போகுதே'ன்னு ஜெர்மன்காரன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டே இருந்தார்கள்.
ஜெர்மன்காரனுக்கு ஒரே குழம்பம். 'நம்பகிட்ட லென்சு வாங்கற மற்ற நாட்டுல பத்து வருஷத்துக்கும் மேல வருதே. இவனுகளுக்கு மட்டும் ஏன் இப்படி சீக்கிரமா வீணாகுது'ன்னு குழப்பம். அவனும் வீணாப்போன லென்சை வச்சி நோண்டி நோண்டி பார்த்துட்டான். காரணம் புரியவே இல்லை. அப்படி நம்ம ஊருகாரன் வெள்ளைக்காரனையும் குழப்பிவிடுகிற அளவுக்கு வேலை செய்திருக்கான்
'அது இன்னான்னா இவன் சூட்டிங் எடுக்கறது முன்பு தினமும் லென்சு முன்னாடி கற்புரத்தை கொளுத்தி சுத்தி சுத்தி காட்டுவான்.' அந்த லென்சு மென்மையான மெல்லிய கண்ணாடி பொருள். நாளடைவில் கற்புர ஆராதணையில் சீக்கிரம் சேதாரமாகும் என்பதை அவனும் அறிந்திருக்கவில்லை. ஜெர்மன்காரனுக்கும் இதுதான் சங்கதின்னும் தெரியல..."
இதை கண்டுபிடித்து சொன்னவர் மணிவண்ணன்