இன்றைய வேத வசனம்

Prathees
3 years ago
இன்றைய வேத வசனம்

மிகவும் பயங்கரமான தோற்றமும், பெரிய, முரட்டு உருவமுடைய ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு கன்வென்ஷன் கூட்டத்தை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
பாடல் ஆராதனை ஆரம்பமானது. பாடலின் இனிமை அவரை கொட்டகை அண்டை இழுத்தது. அந்த இசைக்குத்தக்கதாக தன் கால்களை அசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்த பாடல், இன்னும் நன்றாக இருக்கவே, உள்ளே போய் பின் பாகத்தில் அமர்ந்து கொண்டார். எல்லோரும் கைதட்டி உற்சாகமாய் பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், தன்னை அறியாமலேயே கைதட்டி பாடல் பாட ஆரம்பித்துவிட்டார்.
அந்தப் பாடலின் முடிவு வேளையிலே, பரிசுத்த ஆவியானவரின் தேவ வல்லமை அவர்மேல் இறங்க ஆரம்பித்தது. அவர் உள்ளம் தெய்வீக பிரசனனத்தால் நிரம்பியது.
"உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியான கிறிஸ்து" (யோவான் 1:9),  அவர் உள்ளத்தையும் பிரகாசிப்பித்தார்.
மலையை போன்றிருந்த அவர் ஆட்டுக்குட்டியை போல துள்ளி மகிழ ஆரம்பித்தார்.
ஏன்? அவருக்கு என்ன வந்தது? ஏன் துள்ளினார்? ஆம், கல்வாரி அன்பு அவர் உள்ளத்தில் வந்தது. பரலோக சந்தோஷம் அவர் இருதயத்தை நிரப்பிற்று. தெய்வீக வல்லமை, அவரை பரிபூரணமாய் ஆட்கொள்ளும் போது, பர்வதம் துள்ளாமல் வேறு என்ன செய்ய முடியும்?
#சங்கீதம் 68:16
உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!