இன்றைய வேதவசனம்- இதோ, சீக்கிரமாய் வருகிறேன்!
சில வருடங்களுக்கு முன்பு, எர்ணஸ்ட் என்ற விசுவாசி மரித்துப் போனார். அவர் இங்கிலாந்திலுள்ள ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்.
தன் மரண சாசனமான உயிலில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது, அவரிடம் ஒப்படைப்பதற்காக சுமார், 4,44,000 பவுண்களை ஒதுக்கி வைத்திருந்தார்.
இயேசுகிறிஸ்து வரும்பொழுது, ஆங்கில அரசாங்கத்தை அணுகி தானே இயேசு என்பதை நிரூபித்துப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம்.
இயேசு பூமியிலே தன் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்கு பணத்திற்கு எங்கே செல்வார் என்பதுதான் அந்த போதையான விசுவாசியின் எண்ணம் போல!
அந்தப் பணத்தை, ஏழை மற்றும் திக்கற்றவர்களின் சேவைக்கு பயன்படுத்திருந்தால் எவ்வளவு பிரயோஜனமாயிருந்திருக்கும்!
சகரியா தீர்க்கதரிசி சொல்கிறார், அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். (சகரியா 14:4,5,9)
நீங்கள் தேவனைச் சந்திக்க உங்கள் உள்ளத்தை ஆயத்தப்படுத்துங்கள். பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு பரிபூரணப்படுத்த கடவோம். ஆமென்
#வெளிப்படுத்தல் 22:12
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.