இன்றைய வேத வசனம்- ரோமர் 6:12

Prathees
3 years ago
இன்றைய வேத வசனம்- ரோமர் 6:12

பாறைகளை வெட்டி எடுக்கும் ஓரிடத்தில் பாறைகளை தகர்ப்பதற்காக வெடிமருந்து வைக்கப்பட்டது.
வெடிமருந்தை பற்ற வைத்துவிட்டு அனைவரும் தூரமான இடத்திற்கு பாதுகாப்பிற்காக ஓடி சென்று கொண்டிருக்கும் வேளையில்.
3 வயது குழந்தை ஒன்று தனக்கு முன்பாக இருக்கும் ஆபத்தை அறியாமல், வெடி வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை பார்த்த அனைவரும் திகைத்துப் போய் நின்றனர்.
தாய், பிள்ளையிடத்திற்கு போவதற்குள் பாறை வெடித்து விடும். எனவே, அவள் பிள்ளை அருகே போகாமல் நின்றபடியே அந்த மூன்று வயது பிள்ளைக்கு நேராக தன் கரங்களை விரித்து அழைத்தாள்.
அந்தப் பிள்ளை தாயின் அழுகுரல் அறிந்து தன் தாயினிடத்தில் ஓடி வந்தது.
அந்தப் பகுதி முழுவதும் பயங்கர சத்தத்துடன் வெடி மருந்து வெடித்தது. அதற்குள் அந்தப் பிள்ளை தாயின் கரத்திற்குள் வந்துவிட்டதால், எந்த சேதமுமில்லாமல் பாதுகாப்பு பெற்றது.
அதேப் போல, நாமும் பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போம் என்றால், அறியாமல் வெடிமருந்தின் அருகே சென்ற பிள்ளையின் நிலைமை போன்றுதான் நம் நிலைமையும்.
பாவத்தின் பயங்கரத்தையும், அதனால் வரும் ஆபத்தையும் உணராமல் நீ இருக்கின்றாயோ? இருகரம் நீட்டி உன்னை அன்போடு அழைத்து அரவணைக்க காத்திருக்கும் ஆண்டவர் இயேசு இரட்சகர் இடம் ஓடி வரமாட்டாயா?
அவர் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
அன்பின் கரம் விரித்து ஆசையாய் அழைக்கும் இயேசுவண்டை ஆவலாய் ஓடிவந்து பாவம் நீங்கி அடைக்கலம் பெற்றுக்கொள்ளுவோம். ஆமென்.
#ரோமர் 6:12
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!