இன்றைய வேத வசனம்- யோவான் 2:28

Prathees
3 years ago
இன்றைய வேத வசனம்- யோவான் 2:28

அது திபேரியா கடற்கரை. கடல் அலைகள் வெண்மணற்பரப்பின் மேல் தவழ்வதும், திரும்பிச் செல்வதுமாய் இருந்தது. அந்த கரையோரத்தில், அந்த விடியற்காலை நேரத்தில், இயேசு நின்று துயரத்தோடு கடலைப் பார்த்து வண்ணமாயிருந்தார்.
அங்கே, தன் சிஷர்கள், உன்னத அழைப்பை பெற்று, மூன்றரை வருடங்கள் தன்னிடம் பயிற்சி பெற்று, மனுஷரை பிடிக்க வரங்களை பெற்றுக் கொண்டவர்கள், மீண்டும் பின்மாற்றத்திற்குள்ளே மீன்பிடிக்கச் சென்று விட்டதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
"இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா" (யோவான் 21:5) என்று இயேசு கேட்டதற்கு, அவர்கள் "ஒன்றுமில்லை" என்று பதில் சொன்னார்கள். வெறுமை, தோல்வி, பின்மாற்றம் - இது பரிதபிக்கப் படக்கூடிய நிர்ப்பாக்கியமான நிலைமை!
"அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்." (யோவான் 21:9)
அங்கே கரியடுப்பு போட்டது யார்? மீனையும் அப்பத்தையும் சமைத்து வைத்தது யார்? நம் அருமை நேசரான இயேசு கிறிஸ்து தான்.
துரோகிகளான சீஷர்களையும் ஆவலாய் எதிர்பார்த்து, குளிரும் அதிகாலை வேளையில், அடுப்பை மூட்டி, ஊதி அனல்மூட்டி, தன்னை கடற்கரை மணலில் தாழ்த்தி, ஒரு சமையல்காரனை போல் அந்த தேவ குமாரன் பணிவிடை செய்தார்!
"பேதுருவே என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா?" என்று கேட்ட அவரது கேள்வி, பேதுருவை உடைத்தது. இவ்வளவு அன்புள்ள தன் ஆண்டவருக்காக, எதையும் செய்ய பேதுரு ஆயத்தமாகிவிட்டார். துணிந்துவிட்டார்.
#I_யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!