‘வாய் தவறி பேசிட்டங்க...’ - கைதான மீரா மிதுன் அந்தர் பல்டி

Keerthi
3 years ago
‘வாய் தவறி பேசிட்டங்க...’ - கைதான மீரா மிதுன் அந்தர் பல்டி

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் பட்டியல் இனத்தவர்களைப் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகளை தெரிவித்து யூடியூபில் வீடியோ பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து மீரா மிதுன் மீது புகார் அளிக்கப்பட்டு, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், மீரா மிதுன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது வாய் தவறி பட்டியலின சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிவிட்டேன் என மனுவில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!