மகான்-ஆக மாறிய விக்ரம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Keerthi
3 years ago
மகான்-ஆக மாறிய விக்ரம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தை இதுவரை ‘சியான் 60’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!