நடிகை ராதிகா பிறந்த நாள் 21-8-2021

#Cinema
நடிகை ராதிகா பிறந்த நாள் 21-8-2021

இராதிகா, (பிறப்பு: ஆகத்து 21, 1963) தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார்.

அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா அவருடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து இருக்கிறார். இருவரும் கணவன்-மனைவியாகவே வருகிறார்கள். படம், வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் உள்பட தமிழ் பட உலகின் பிரபல நாயகர்கள் அனைவருடனும் ராதிகா சரத்குமார் ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!