இன்றைய வேத வசனம்- ஏசாயா 9:2
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; (ஏசாயா 9:2)
கிறிஸ்துவில் நீங்கள் ஒரு பெரிய வெளிச்சத்தைக் காண்கிறது மட்டுமல்ல, அவரை ஏற்றுக்கொள்ளும் போது, அவர் உங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரகாசிப்பிக்கிறார்1
1) இருளில் பிரகாசிக்கிறார்:-
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. (யோவான் 1:6) பாவமாகிய இருள், பிசாசாகிய இருள், அறியாமையாகிய இருள், அத்தனையும் நீக்கி, தன் மகிமையான சுவிசேஷ ஔியால், உங்களுக்குள் பிரகாசிக்கிறார்.
2) கிரியைகளை வெளிப்படுத்துகிறார்:-
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். (யோவான் 3:20) ஆனால் தேவனுடைய பிள்ளைகளோ, கிறிஸ்துவின் ஒளியில், தங்கள் பாவங்களை அறிந்து, அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்கிறார்கள்.
3) வழிகளை விளக்கிக் காட்டுகிறார்:-
இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:35,46). பாதை அறியாமல் நீங்கள் திகைக்கும்போது, ஒளியாய் வந்து, கிறிஸ்து உங்களை நடத்திச் செல்லுவார். இஸ்ரவேலருக்கு அக்கினி ஸ்தம்பமாய் அவர் இருக்கவில்லையா?
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9) அவர் உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்க இடங்கொடுப்பீர்களா?
#II_கொரிந்தியர் 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.