சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' எப்போது வெளியாகிறது தெரியுமா ?
#Cinema
Mugunthan Mugunthan
3 years ago
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் 40வது படமான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.