ஒரே படத்தில் நடிகர் கமல்ஹாசன் - சூர்யா ?

Keerthi
3 years ago
ஒரே படத்தில் நடிகர் கமல்ஹாசன் - சூர்யா ?

கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிக்க ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அமல் நீரட் தெரிவித்துள்ளதாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் உயிர் கொடுக்க கடுமையாக மெனக்கெடுவார். நடிகர் சூர்யாவும் அதற்கு சற்றும் குறைந்தவரல்ல. இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் அந்தப் படம் நிச்சயம் மிரட்டலாக இருக்கும். 

இந்த நிலையில் பிரபல இயக்குநர் சொன்ன தகவலால் இருவரின் ரசிகர்களும் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். மலையாள திரையுலகில் பிரபல இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் அமல் நீரட். இவரது இயக்கத்தில் உருவான 5 சுந்தரிகள், காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்த நிலையில் இயக்குநர் அமல் நீரட், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து நடிக்கும் வகையில் தான் கதை ஒன்று தயார் செய்திருப்பதாகவும், இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்தத் தகவலில் துளியும் உண்மை இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் இருவரது ரசிகர்களுக்கும் அந்தப் படம் வெளியாகும் நாள் திருவிழாவாகத் தான் இருக்கும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!