இன்று இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் பிறந்தநாள் 23-8-21
எஸ்.ஏ. ராஜ்குமார் (ஆங்கிலம்:S. A. Rajkumar) என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
வாழ்க்கை சுருக்கம்
செ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவர். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.
விருதுகள்
1997 – சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு – பெள்ளி
1999 – சிறந்த இசையமைப்பாளர்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு – ராஜா
1997 – சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது – தமிழ் – சூரிய வம்சம்