எப்படி இதெல்லாம்?
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 45,000 இடி-மின்னல்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது; இந்தக் கணக்கில், வருடத்திற்கு ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமான இடிமின் புயல்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
அப்படியானால், இந்த நொடியில் கிட்டத்தட்ட 2,000 இடிமின் புயல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு இடிமின் புயலிலும் உட்பட்டிருக்கும் மேகங்களில், இரண்டாம் உலகப் போரின்போது போட்ட நியூக்ளியர் குண்டுகளைப் போல பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட குண்டுகளுக்கு நிகரான சக்தி உருவாகிறது.
அதில் சிறிதளவு சக்தியே மின்னலாக பளிச்சிடுவதை நீங்கள் பார்க்கலாம். இது எவ்வளவு பிரமிக்கத்தக்கது!
அத்துடன், இவ்வாறு மின்னல் வெட்டுவதால், அதிலிருந்து வெளியாகும் சக்தி, நைட்ரஜன் கூட்டுப்பொருட்கள் உருவாக உதவுகிறது. அவை பூமியிலுள்ள மண்ணை அடைந்ததும் தாவரங்கள் அவற்றை இயற்கை உரமாக உறிஞ்சிக்கொள்கின்றன.
ஆகவே மின்னல், சக்தியின் வெளிக்காட்டாக இருப்பது மட்டுமல்லாமல் உண்மையிலேயே நன்மைகளையும் தருகிறது.
இதெல்லாம், பூமியின் துவக்கம் முதல் இன்றுவரை மாறாமல், இருப்பது எப்படி? பின்வரும் வேதவசனத்தைப் பாருங்கள்! புரிந்துகொள்ளலாம்!
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். (சங்கீதம் 104:14-15)
ஆமென்!