நடிகர் சாந்தனு பாக்கியராஜ் பிறந்தநாள் 24-8-21
#Cinema
Mugunthan Mugunthan
3 years ago
சாந்தனு கிருஷ்ணசாமி பாக்யராஜ் (பிறப்பு: 1986 ஆகஸ்ட் 24) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் மற்றும் நடிகை சரண்யா பாக்யராஜின் தம்பியும் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
சாந்தனு 24, ஆகஸ்ட், 1986ம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமாவின் மகன் ஆவார். இவருக்கு சரண்யா என்ற ஒரு சகோதரி உண்டு.