படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அபிஷேக் பச்சன்!
Keerthi
3 years ago
படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக, நடிகர் அபிஷேக் பச்சன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் பச்சன் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட சிறிய விபத்தில் சிக்கி அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கையில் பெரிய கட்டுடன் காணப்படுகிறார். இவரை பார்க்க இவரது தந்தை மற்றும் சகோதரி மருத்துவமனைக்கு வந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமை இவருடைய கையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இப்போது, தான் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.