தங்க இரத்தம்
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஏ, பி, ஓ, ஏபி பாசிட்டிவ்- நெகட்டிவ் இரத்த வகைகளைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகம் முழுவதும் மிகக் குறைந்த நபர்களிடையே காணப்படும் மற்றொரு இரத்த வகை ஒன்று உள்ளது.
அந்த இரத்த வகை, உலகின் மிக அரிதான இரத்த வகையாக கருதப்படுகிறது.
*உலகளவில் வெறும் 43 பேரில் மட்டுமே இருக்கும்* இதன் உண்மையான பெயர் "Rh null." இது, அனைத்து வகையான இரத்தத்திலும் அரிதானது என்பதால், தங்க இரத்தம் (Golden Blood) என்று அழைக்கப்படுகிறது.
அதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அதில் எந்த ஆன்டிஜெனும் இல்லை. அதாவது, இந்த இரத்தம் எந்தவொரு இரத்தக் வகை கொண்ட நபர்களுக்கு வழங்கப்பட்டாலும், அவரது உடல் அதை ஏற்றுக்கொள்ளும்!
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. (எபிரெயர் 9:22)
ஆதாம், தொவங்கி, இன்று பிறந்த குழந்தை வரைக்கும் உள்ள மனிதர்களுக்காக கொடுக்கப்பட்ட ஒரே இரத்தம் ஆண்டவராகிய இயேசுவின் இரத்தம் மட்டுமே!
அது மட்டுமே! உலகின் அனைவருக்கும் பொருந்தும்! பாவங்களை மன்னிக்கும்! பரலோகத்துடன் இணைக்கும்! இவ்வுலகின் எந்த இரத்தமும், இயேசுவின் இரத்தத்துக்கு ஈடாகாது! *கழுவப்பட்டோர் பாக்கியவான்கள்!
ஆமென்!