இன்றைய வேத வசனம்(30.8.2021)

#Bible #God #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம்(30.8.2021)

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

அனுபவம்

பொதுவாக நான் தேவன் மீது பக்தி வைத்திருக்கிறேன் எனக் கூறி ஆலயத்திற்கு செல்லும் போது கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதும் பக்திமானைப் போல நடிப்பதை கர்த்தர் விரும்புவதில்லை, அதை கர்த்தர் அருவருக்கிறார்.

யாக்கோபு தனது நிருபத்தில் எழுதும் போது உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். (யாக்கோபு 1:26)

வெளியில் பக்தியுள்ளவர்களைப் போல் காண்பித்துவிட்டு இருதயத்தில் வஞ்சனை இருந்தால் அந்தப் பக்தியை கர்த்தர் அங்கீகரிக்கமாட்டார்

வசனம்

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.எபிரெயர் 3:13

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!