தாமதமானால் என்ன? தரமான அற்புதம் ஆயத்தமாகிறதே!
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அற்புதம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமியில் மனுஷ குமாரனாக ஊழியம் செய்த நாட்களில் கானானிய பெண் ஒருத்தி தன் மகளுக்காக விண்ணப்பம் பண்ணினாள்.
அநேகருக்கு உடனடியாக சுகம் கொடுத்த, இயேசு கிறிஸ்து, அப்பெண்ணுக்கு, பிரதியுத்தரமாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
ஏனென்றால் காணாமல் போன இஸ்ரவேல் ஜனங்களுக்காகத்தான் அவர் அனுப்பப்பட்டார். முதலாவது, அவர்களுக்கு அற்புதம் செய்வதுதான் பிதாவின் சித்தம்.
(புறஜாதி மக்களை அற்புதங்ககளால் சேர்த்துக்கொள்ளும் திட்டம், சிலுவையில் மரித்து, உயிர்த்தபின் நடத்த முன் குறிக்கப்பட்ட ஒன்று) இது பரலோக திட்டம்.
அவருடைய சீஷர்கள் வந்து இவள் நம்மை பின்தொடர்ந்து வருகின்றாள் இவளை அனுப்பிவிடும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
அதற்கு அவர் நான் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டனேயன்றி, மற்றபடியல்லவென்றார்.
ஆனால், அதின் நடுவே, கானானியப் பெண்ணின் விசுவாசம் பெரிதாக இருந்தது. அந்த விசுவாசத்தை வெளிப்படுத்தவும், கனப்படுத்தவும் அந்த தாமதம் தேவையாக இருந்தது... பெரிய விசுவாசம், பெரிய ஆண்டவரை, பெரிய அற்புதம் செய்ய வைத்தது.
வசனம்
நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனும் அப்படியொரு விசுவாசத்தால் சுகப்படுத்தப்பட்டான். (மத் 8:8)
பரிகாரம்
அவர்கள் புற இனத்தாராக இருந்தும், கர்த்தர் அவர்களை நேசித்து, கனப்படுத்தி, சுகப்படுத்தினார். பிள்ளைகளாகிய நம் விசுவாசமும் அவைகளில் ஒன்றைப் போல அல்ல! பெரிய கனத்தை, மகிமையை சுதந்தரிக்கும் ஒன்றாக இருக்கும்!
தாமதம், பெரிய அற்புதத்தையே எப்போதும் விளைவிக்கும்!
ஆமென்!