இன்றைய வேதவசனம் (10.9.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
ஒரு சிறிய பட்டணம் ஒன்றில், திடீரென்று எழுப்புதல் ஏற்பட்டது. விசுவாசிகளின் தொகை நாளுக்கு நாள் பெருகியதால்.
சபை கூடுவதற்காக மண்டபம் ஒன்று கட்டி எழுப்பினார்கள். மண்டபத்தை பிரதிஷ்டை செய்து, தேவனை துதித்து மகிழ்ந்தார்கள்.
அது அந்தப் பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களுக்கு எரிச்சலையும், பொறாமையையும் தந்தது. அவர்கள் திரளாக வந்து மண்டபத்திற்கு தீ வைத்து, மண்டபத்தை தரை மட்டமாக இடித்துப்போட்டு விட்டார்கள்.
அவர்கள் மனச் சோர்வடைந்து, தளர்ந்து விடவில்லை. "கர்த்தர் ஒருபோதும் தவறு செய்கிறவரல்ல, எல்லாம் எங்கள் நன்மைக்காகவே செய்வார்" என்று சொல்லி தடித்த துணியால், சபை கூடுவதற்காக ஒரு கூடாரத்தைச் செய்தனர்.
அடுத்த ஞாயிறு காலை ஆராதனை நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டு, அந்த முழு பட்டணத்தையும் அப்படியே அசைத்துது. பெரிய பெரிய கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டது.
ஆனால் அந்த சபை கூடாரம் துணியால் செய்யப்பட்டிருந்தபடியால், எந்த சேதமும் ஏற்படவில்லை. அவர்கள் பழைய மண்டபத்திற்குள் இருந்திருந்தால் அத்தனை பேரும் மரித்திருப்பார்கள்!
நண்பர்களே, உங்கள் வாழ்க்கையில் வரும் தோல்விகளினாலும் தொல்லைகளினாலும் சோர்ந்து போகாதீர்கள். கர்த்தரின் ஞானத்தை நீங்கள் இன்று புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், ஒரு நாளில் அவர் எல்லாவற்றையும் உங்கள் நன்மைக்காகவே செய்தார் என்பதை அறிந்துகொள்வீர்கள்!
ஆமென்.
ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.