இன்றைய வேத வசனம் 13.9.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
கடந்த 2003ம் ஆண்டில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்தது அந்த தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன
இறுதி போட்டிக்கு ஒரு நாளைக்கு முன் பத்திரிக்கையாளர்கள் நேர்காணலுக்கு ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது அதில் இரு அணி கேப்டன்களும் பங்குப்பெற்றனர்
முதலாவது இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பினர் நாளை இறுதி போட்டி நடக்க இருக்கின்றது இறுதிப்போட்டியில் வெற்றிப்பெறும் அணிதான் கோப்பையை வெல்ல முடியும் நாளை நடக்க இருக்கின்ற போட்டியில் உங்கள் அணி வெற்றிபெறுமா..? என்று கேட்டனர்
அதற்கு இந்திய கேப்டன் அளித்த பதில் எங்களது அணி மிக பலம் வாய்ந்த அணி எங்கள் வீரர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் நாளையப் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி நிச்சயம் கோப்பையை கைப்பற்றுவோம் எங்கள் அணி வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை என பதிலளித்தார்
பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அவர்களிடம் கேட்டப்பொழுது நானும் எங்கள் வீரர்களும் கடவுளை நம்பி வருகின்றோம் நாளை விளையாடுவதற்கு ஏற்ற பயிற்சி செய்து வருகிறோம் எந்தெந்த பகுதியில் கவனம் செலுத்த வேண்டுமோ அதற்கு ஆயத்தபட்டு வருகின்றோம்
நாளையப் போட்டியில் எங்கள் திறமைகளை வெளிப்படுத்துவோம் ஆனால் வெற்றியோ? தோல்வியோ? அது கடவுளின் செயல்தான் எங்களிடம் ஒன்றுமில்லை என்று மிக எளிமையாக பதிலளித்தார்
ஆனால் நடந்தது என்னவென்றால் இந்தியா மிக சொற்ப ரன்களே எடுத்து ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது
நாம் எந்த ஒரு காரியத்தை செய்ய முற்படும்போதும் தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து செய்யும்போது கர்த்தர் காரியத்தைக் வாய்க செய்வார்
யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.