இன்றைய வேத வசனம் 15.9.2021

#Prayer #Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 15.9.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன். (#சங்கீதம் 91:15)

கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கென்று விசேஷமாய்க் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தம் இது நம் தேவன் மறு உத்தரவு அருளுகிற தேவன்.

கர்த்தருடைய போன் நம்பர் 333 என்று, ஒருவர் வேடிக்கையாகச் சொல்லுவார். அதாவது எரேமியா 33:3 ஆகும்.

"என்னை நோக்கிக் கூப்பிடு; அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்"

கர்த்தரை நோக்கிக் கூப்பிட வெட்கப்படாதேயுங்கள்! கெட்ட குமாரன் வெட்கப்படவில்லை. தன் தகப்பனிடம் எழுந்து வந்தான். உடனே தகப்பன் அவனை தன் மார்போடு அணைத்துக் கொண்டான் அல்லவா?

மேல் வீட்டறையில் சீஷர்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள். கர்த்தர் மறு உத்தரவு அருளிச்செய்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவியானவரைப் பொழிந்தருளினார்.

ஆகவே, கர்த்தரை உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள், அடக்கிக் கொள்ளாதேயுங்கள்.

எலியாவின் குரலுக்கு மறு உத்தரவு அருளி, அக்கினியை இறக்கியவர், நீங்கள் வேண்டிக்கொள்ளும் போது அவர் உங்களை பரிசுத்தாவியினாலும், அக்கினியினாலும் நிரப்புவார்.

சிலுவையில் கள்ளன் அவரை நோக்கிக் கூப்பிட்டான். உடனே பரதீசு பாக்கியம் பெற்றான். ஆயக்காரன், பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும் என்று ஜெபித்தான். நீதிமானாய் திரும்பினான்.

தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டு, தங்கள் குருடான கண்கள் திறக்கப் பெற்றார்கள்.

கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்.

"இந்த ஏழை கூப்பிட்டான். கர்த்தர் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்" (சங்கீதம் 34:6).

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!