ஆசிரியர் சம்பள பிரச்சினைகளுக்கு பிரதமரின் தீர்வுகள்

#Mahinda Rajapaksa
Prathees
2 years ago
ஆசிரியர் சம்பள பிரச்சினைகளுக்கு பிரதமரின் தீர்வுகள்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்த பிரதமர் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களை அழைத்து  நேற்று கலந்துரையாடலை நடத்தினார். 

இதன்போது 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.