ஒரே நாளில் சசிகுமாரின் 2 படங்கள் திரையரங்கில் ....

Prabha Praneetha
3 years ago
ஒரே நாளில் சசிகுமாரின் 2 படங்கள் திரையரங்கில் ....

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சசிகுமார், இவர் கைவசம் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

அதன்படி, பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் திகதி  நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.

இதேபோல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக, சசிகுமாரின் மற்றொரு படமும் களமிறங்கி உள்ளது. கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படமும் நவம்பர் 26-ந் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சசிகுமார் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!