மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி(புகைப்படம் உள்ளே)
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் புனித்ராஜ்குமார், இவர் அங்குள்ள ரசிகர்களால் அப்பு என அன்புடன் அழைக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபொழுது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புனித். பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
மேலும் கடந்த ஞாற்றுக்கிழமை புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் , குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் கர்நாடகாவிற்கு சென்று அங்குள்ள புனித்ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அவரின் சகோதரர் சிவராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் "ஒரு முறை மேடையில் நான் ரஜினி சார் போல பேசியதற்கு தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து பாராட்டினார். அவரிடம் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் எப்போதும் வீட்டிற்கு வாங்க வீட்டுக்கு வாங்க என்பார்,ஆனால் இப்படியான நிலையில் அவரின் வீட்டிற்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை
அவர் மறைந்தாலும் அவர் செய்த சேவைகள் அவரை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும்" என கூறியுள்ளார்.