காதலனை கழட்டிவிட்டாரா நயன்தாரா? விக்னேஷ் சிவன் பதிவால் பரபரப்பு!
#TamilCinema
Mugunthan Mugunthan
3 years ago
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதில் இருந்து விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர் இருவரும் கோலிவுட் சினிமாவின் செலிபிரிட்டி காதலர்களாக பார்க்கப்படுகின்றனர்.
இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில்,
“நல்ல மனிதராக இருங்கள்.
ஆனால், அதை நிரூபிக்க நேரத்தை வீணாக்காதீர்கள்” என quotes ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இருவரின் காதலில் ஏதேனும் விரிசல் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், விக்னேஷ் சிவன் ஏன் எதற்காக இப்படி போட்டார் என்பது தெரியவில்லை.