இந்திய சினிமாவில் முதல் படம்!… ‘டாக்டர்’ செய்த மாபெரும் சாதனை…..
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். பிளாக் காமெடி வகையில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சத்தமில்லாமல் இப்படம் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படம் தற்போது நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் பல லட்சம் பேர் இந்த படத்தை பார்த்துள்ளனர். இதையடுத்து, நெட்பிளிக்ஸ் குளோபல் முதல் 10 படங்களின் வரிசையில் இப்படம் இடம் பெற்றுள்ளது.
அதாவது, உலகம் முழுவதும் கடந்த 2 வாரங்கள் நெட்பிளிக்ஸில் அதிகம் பேர் பார்த்த பட வரிசையில் டாக்டர் படம் 10வது இடத்தை பிடித்துள்ளது. சுமார் 14 லட்சத்து 30 ஆயிரம் பேர் இப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர். அதேபோல், நெட்பிளிக்ஸில் கடந்த 2 வாரத்தில் இந்தியாவில் அதிகம் பேர் பார்த்த படங்களில் டாக்டர் படம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த தகவலை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் பகிர்ந்து உங்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளது. மேலும், இதை ரீடிவிட் செய்துள்ள சிவகார்த்திகேயன் ‘எங்கள் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இதை சாத்தியப்படுத்தியுள்ளது. இயக்குனர் நெல்சன், அனிருத் மற்றும் இப்படத்தை உருவாக்கிய படக்குழுவினருக்கு நன்றிகள். டாக்டர் படம் எப்போதும் எனக்கு நெருக்கமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.