டாப் 10 பட்டியலை வெளியிட்ட நெட்பிலிக்ஸ்

Prasu
2 years ago
டாப் 10 பட்டியலை வெளியிட்ட நெட்பிலிக்ஸ்

நெட்பிளிக்ஸ் ஓடிடி இணைத்தளத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இணைய வழியிலேயே திரைப்படங்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் காணும் வசதி ‘ஓவா் தி டாப்’ (ஓடிடி) என்றழைக்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலேயே வெளியிடப்பட்டன. பொது முடக்கத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததன் காரணமாக அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்தது.

இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், என்கிற புதிய இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் அதிக மணி நேரம் பார்க்கப்படும் படங்களின் டாப் 10 பட்டியலை இந்த இணையத்தளத்தில் வெளியிடுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் எந்தப் படம், எந்த இணையத் தொடர் அதிக மணி நேரம் பார்க்கப்பட்டது என்கிற தகவலையும் இதன்மூலம் அறிய முடியும்.

இதன்படி நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரையிலான டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் ரெட் நோட்டீஸ் படம் அதிக மணி நேரம் பார்க்கப்பட்டு (148.72 மில்லியன் மணி நேரம்) முதல் இடத்தைப் பிடித்துள்ளது. படங்கள் அல்லாத இணையத்தொடர்களில் நார்கோஸ் மெக்ஸிகோ – பருவம் 3 முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அளவிலும் ரெட் நோட்டீஸ் படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. டாப் 10 பட்டியலில் ஒரே ஒரு தமிழ்ப் படம் இடம்பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்துக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது. டாக்டர் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு 5-ம் இடம் கிடைத்துள்ளது. டாக்டர் படம் இரு வாரங்களாக டாப் 10- ல் உள்ளதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளிலும் டாப் 10 பட்டியலில் டாக்டர் படம் இடம்பிடித்துள்ளது. இந்திய அளவில் இணையத்தொடர்களில் ஸ்குவிட் கேம் – முதல் பருவத்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.