கானா பிறந்த தினம்! தேனிசை தென்றல் ஸ்பெஷல்
தமிழர்களின் அடையாளங்களில் மிக முக்கியமான ஒன்று கானா. சென்னை போன்ற பெரு நகரங்களில் பல இளைஞர்கள் தங்கள் சந்தோஷம், துக்கம், காதல், நட்பு என அனைத்திற்கும் ஆயுதமாக பயன்படுத்துவது கானா பாடல்களை தான். ஆனால், இந்த பாடல்களை மேல்தட்டு சமூகம் என்றும் மதித்ததாக தெரியவில்லை.
அவர்களே அசந்து போய் பார்க்கும் படி கானாவை கலைத்துறைக்கு கொண்டு வந்தவர் தான் தேனிசை தென்றல் தேவா. இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும்.
அங்கிருந்து சென்னை புறப்பட்டு வந்து தன் தம்பிகளுடன் கானா பாடல்கள் பாடி சினிமா வாய்ப்பை தேடி வந்தார். இவர் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமான படம் மனசுக்கேத்த மகராசா.
இதை தொடர்ந்து வைகாசி பொறந்தாச்சு, வசந்தகால பறவை, நாடோடி காதல், அம்மா வந்தாச்சு போன்ற பல படத்திற்கு இசையமைத்தாலும், சூப்பர் ஸ்டார் படமான அண்ணாமலைக்கு இசையமைத்த பிறகே இவரின் திரைப்பயணத்தில் கிராப் விண்ணை நோக்கி பறந்தது.
அன்றிலிருந்து திரைத்துறையின் முன்னணி நடிகர்களான கமல், விஜய், அஜித் என அனைவரும் விரும்பும் இசையமைப்பாளார் ஆனார். வாலி, குஷி, முகவரி, பஞ்சதந்திரம், ரெட், பம்மல் கே. சம்பந்தம், தம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இதுபோல் 100 கணக்கான படங்களுக்கு இசையமைத்த நம்மை மகிழ்வித்து இன்னும் மகிழவைத்து வரும் தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு ‘சினி உலகம்’ சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.